தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் இன்று அந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், கோவிலில் பராமரிப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இது குறித்து சிவனடியார்கள் ஆட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் நீதிமன்றத்திற்கு சென்றார்கள் என கூறினார்.