சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல். 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். விஜய் ஏன் தமிழ் புத்தாண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.