நெல்லை மாவட்டத்தில் உளுந்து பாசிப்பயறு கொள்முதல் செய்ய ராமையன்பட்டி, சங்கரன்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட உள்ளது. உளுந்து கிலோ ரூ.74 வீதமும், பாசிப்பயறு கிலோ ரூ.86.82 வீதமும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பு உரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முன்பதிவு செய்தல் வேண்டும். அழைப்பு வரும் தேதியன்று விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கூடுதல் விபரங்களை 6369401502 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என விற்பனைக் குழு செயலர் தெரிவித்துள்ளார்.