
திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை கூட்டம் தேதி அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் மற்றும் இணையம் சார்ந்த தொழிலில் ஈடுப்பட்டுள்ள கிக் தொழிலாளர்களை நலவாரியங்களில் அதிகமாக சேர்ப்பது குறித்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் 22.04.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் இணை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.