திருநெல்வேலி டவுனை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் வியட்நாம் நாட்டை சேர்ந்த நுகின் லீ தய் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வியட்நாமில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் இன்று திருநெல்வேலியில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மகேஷின் உறவினர்கள் மற்றும் மணமகள் நுகின் லீ தய் உறவினர்கள் பங்கேற்றனர்.