நெல்லை டவுனில் ஆறுமுகம் என்ற இளைஞர் நேற்றிரவு கொன்று புதைக்கப்பட்டார். ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளஞ்சிறார் உள்பட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் சேர்ந்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை தற்போது போலீசார் கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் இளஞ்சிறார்கள் என கூறப்படுகிறது. அதுகுறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.