ஏர்வாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் சிறுமியை அவரது உறவினரான களக்காட்டை சேர்ந்த வினித்ராஜா (26) என்பவருக்கு சமீபத்தில் உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். குழந்தை திருமணம் என்பதால் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வினித்ராஜா மற்றும் சிறுமியின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்து வினித்ராஜாவை இன்று கைது செய்தனர்.