தாழையூத்தை சேர்ந்த அர்ஜுனா பர்வீன் என்ற பெண் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் என்னை தவறான தொழிலுக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார். ஆத்திரத்தில் நேற்று அவரை தட்டி கேட்டேன். தொடர்ந்து எனக்கு டார்ச்சர் கொடுத்ததால் காவல் நிலையத்திற்கு சென்றேன். சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.