பாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு ஊழியர்கள் பணி நேரத்தில் சீட்டு விளையாடுவது போன்ற வீடியோ இன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகி ஒருவர் எங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை நீங்கள் இங்கே சீட்டு விளையாடுகிறார்களா என அந்த வீடியோவில் பேசுகிறார்.