
பாளை: சாக்லெட் கடையில் கொள்ளை; போலீஸ் விசாரணை
பாளை வ. உ. சி மைதானம் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை இன்று காலை கடையை திறந்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கல்லாப்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விற்பனை பணம் ரூ. 60 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. கடை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாளை போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.