தமிழில் பார்வை ஒன்றே போதுமே, பத்ரி, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தவர் மோனல். நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் கடந்த 2002 ஏப்ரல் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரின் நினைவு நாள் ஆகும். இதையொட்டி சிம்ரன் வெளியிட்ட பதிவில், "மோனல், உன்னைப் பற்றிய நினைவுகள் இல்லாமல் ஒரு நாளை கூட நான் கடக்கவில்லை. 23 வருடங்களாகியும், அமைதியான தருணங்களில் உன் துளிகளை இன்னும் நான் தேடுகிறேன்" என்றார்.