

பாளை நமது கோட்டை; அமைச்சர் நேரு பெருமிதம்
நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு பேசுகையில், தமிழகத்தில் எப்போதும் 100 சதவீதம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு முதல்வரின் குளத்தூர் தொகுதி அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டை தொகுதி உள்ளது. பாளை தொகுதி நமது கோட்டையாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றி என்ற நிலையை உருவாக்க அயராது உழைக்க வேண்டும் என்றார்.