நெல்லை: 2026 சட்டமன்ற தேர்தல்; அதிமுக ஆலோசனை
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தச்சநல்லூர் கிழக்கு, மேற்கு சங்கர் நகர் பேரூராட்சி நாரணம்மாள் புரம் பேரூராட்சி ராமையன்பட்டி ஊராட்சி ராஜவல்லிபுரம் ஊராட்சி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கபட்டது.