ஏர்வாடி; தன் உயிரை மாய்த்து பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

81பார்த்தது
புளியங்குடியில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக நாகர்கோவில் சென்ற அரசு பேருந்தை மாரியப்பன் என்பவர் இன்று ஓட்டி வந்தார். பேருந்து நெல்லை ஏர்வாடி அருகே சென்ற போது திடீரென மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பயணிகளை காப்பாற்றும் நோக்கில் அவர் உடனடியாக பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு சாய்ந்து விழுந்தார். பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் சோகம் ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி