'சமத்துவம், சகோதரத்துவம், சமநீதி'.. EPS உறுதி

53பார்த்தது
'சமத்துவம், சகோதரத்துவம், சமநீதி'.. EPS உறுதி
அம்பேத்கரின் பிறந்தநாளில் சமத்துவம், சகோதரத்துவம், சமநீதி கொண்ட சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், தீண்டாமையை வேரறுத்து சமநிலையை பரவச் செய்த சமத்துவ போராளி, கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குவதோடு அவர் வகுத்த அரசியல் சாசனத்தின்படி செயல்பட உறுதி ஏற்போம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி