நெல்லை பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

53பார்த்தது
நெல்லை பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் திரு. பரமேஸ்வரன் தலைமையில் செயலாளர் திரு. ஜெபசிங், பொருளாளர் திரு. ஆரோக்கியராஜ், முன்னிலையில் நடைபெற்றது. திபாவளி பண்டிகை பட்டாசு தற்காலிக உரிமம் 15 நாட்களுக்கு வழங்குவது, நிரந்தர உரிமம் 3 ஆண்டுகள் வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர் திரு. சரவணன், மூத்த உறுப்பினர் திரு. மதன்மோகன், திரு. சிவபாலன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி