பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்முடியிடம் இருந்து அமைச்சர் பதவியை பறிப்பதுதான் சரியான தண்டனை. மக்கள் பிரதிநிதியாக உள்ள அமைச்சர் பொன்முடி பெண்களை அவமரியாதையாக பேசியுள்ளார். அவர் என்ன திமுகவையா பேசினார் கட்சி பதவியை மட்டும் பறித்துள்ளீர்கள்? அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என தெரிவித்தார்.