பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மீக யாத்திரைக்கு சென்றுள்ளார். 3 நாள் ஆன்மீக பயணமாக நேற்று (ஏப்., 13) உத்தரகாண்ட் புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை, அங்கிருந்து இமயமலை செல்கிறார். பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்துவிட்டு, இமயமலை சென்று, தியானத்திலும் ஈடுபடவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலை சென்று தியானம் மேற்கொள்வது போல், அண்ணாமலையும் ஆன்மீக பாதையில் தற்போது பயணிக்கிறார்.