நெல்லை மாவட்டத்தில் இன்று கொடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் திசையன்விளை பகுதியில் இன்று பிற்பகல் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார் 20 நிமிடம் கொட்டி தீர்த்த கன மழையால் பொதுமக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மேலும் மழை காரணமாக அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. எனவே மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.