நவராத்திரிக்கு பின்னால் உள்ள புராணக் கதை.!
பிரம்ம தேவனிடம் சாகா வரம் பெற்ற மகிஷாசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை வீழ்த்த எண்ணிய அம்பிகை, ஒவ்வொரு ரூபத்தில் ஒன்பது நாள் மகிஷாசுரனிடம் போர் புரிந்தார். 10-வது நாள் எருமை ரூபம் கொண்ட மகிஷாசுரனை அம்பிகை வீழ்த்தி அதர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் தெய்வம் போராடியதையே நவராத்திரியாக கொண்டாடுவதாக புராணங்கள் கூறுகிறது. அம்பிகை வெற்றி பெற்ற 10-வது நாளைய விஜயதசமியாக கொண்டாடி வருகிறோம்.