சென்னையில் இருந்து மதுரை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணியை டிக்கெட் பரிசோதகர் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்பதிவு பயணப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் பாலகிருஷ்ணன் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பயணி உறக்கத்தில் இருந்த நிலையில், அவரை பாலகிருஷ்ணன் வேகமாக தட்டி எழுப்பி சோதனையில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது கைகலப்பாக மாறியது.