எல்லா மாநிலமும் சேர்ந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும், தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். மேலும், “மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலை, தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு குறித்த சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்”. என்றார்.