பான் மசாலா மென்றுவிட்டு சாலையில் எச்சில் துப்புபவர்களின் புகைப்படங்களை எடுத்து செய்தித்தாள்களில் வெளியிட்டு பொதுவில் அவமானப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று (அக்., 02) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களின் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். மகாத்மா காந்தியே அப்படி சில சோதனைகளை செய்துள்ளார்' என்றார்.