நாகார்ஜூனா குறித்து தெலங்கானா அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் நாகார்ஜூனாவின் மனைவி ராகுல் காந்திக்கு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ராகுல் காந்தி அவர்களே, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால் உங்கள் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துங்கள். மேலும் பெண் அமைச்சர் பேசிய விஷமத்தனமான கருத்துக்களை வாபஸ் பெற செய்து, எங்கள் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.