
தமிழகம்: 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை
தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழையானது தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.