புளி, தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மிளகு ரசம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றது. வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் மிளகு ரசத்திற்கு உண்டு. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்புகளையும் தடுக்கும் மிளகு, சிறுநீர் சீராக வெளியேற உதவி புரிகின்றது.