கோவை 100 அடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தான் கனிமொழி எம்பி உதவியாளரின் தம்பி என கூறி குடி போதையில் வந்த இளைஞர் உள்ளிட்ட மூவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைதான 3 இளைஞர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், “என் பெயர் கிரண். நானும் என் நண்பர்களும் போலீசாரிடம் தவறான வார்த்தைகளை பேசிவிட்டோம். கனிமொழியின் உதவியாளர் யார் என்றே தெரியாது.” என்றார்.