“ஆளுங்கட்சிக்கு எதிராகவே மாநாடு”.. விசிக தொண்டர் கருத்து

69பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 2) உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து விசிக தொண்டர் ஒருவர் கூறுகையில், "கூட்டணியில் இருந்துகிட்டே ஆளும் கட்சிக்கு எதிரா மது ஒழிப்பு மாநாடு நடத்துகிற ஒரே தைரியம் விசிக-வுக்கு மட்டும் தான் இருக்கு" என கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி