நாம் இறைவனுக்கு படைக்கும் போது அதை 'நைவேத்தியம்' என்கிறோம். அதுவே திரும்ப பெறும் போது அதை பிரசாதம் என்கிறோம். சாதாரண சாதமாக இருப்பது, இறைவனின் திருவடியில் வைக்கப்படும் போது புனிதமடைந்து பிரசாதமாக மாறுகின்றது. சிலர் பிரசாதம் என்றால், இறைவனுக்காக பிரத்யேகமாக செய்யப்படும் உணவு என நினைக்கின்றனர். ஆனால் பிரசாதம் என்ற சொல்லுக்கு தூய்மை, மகிழ்ச்சி, பேரின்பம், அமைதி என்பதே பொருளாகும்.