நிலவின் அதிர்வுகளை கண்டறிந்த பிரக்யான் ரோவர்
நிலவின் தென் துருவப் பகுதியில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளை சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் பதிவு செய்துள்ளது. பிரக்யான் ரோவரில் பதிவாகியுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த இஸ்ரோ குழுவினர், நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. 200 அதிர்வுகள் பிரக்யான் மற்றும் பிற கருவிகளால் ஏற்பட்டது. 50 அதிர்வுகள் அவற்றிற்கு தொடர்பில்லாதது. அதிகபட்மாக ஒரு அதிர்வு 14 நிமிடங்கள் நீடித்துள்ளது" என தெரிவித்துள்ளனர்.