
மதுபோதையில் தகராறு.. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சித்தலம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கவியரசன் என்பவருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி சுனிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக கவியரசனை மிரட்ட, அவரது வீட்டின் மீது ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.