மாநகராட்சியுடன் தனக்கன்குளத்தை இணைக்க மக்கள் எதிர்ப்பு.
மதுரை மாநகராட்சியுடன் தனக்கன்குளம் ஊராட்சியை இணைக்க கூடாது எனவும் கிராம பொதுமக்கள் மாநகராட்சியுடன் இணைய விருப்பம் இல்லை எனவும் மதுரை மாநகராட்சி பகுதியில் இணைந்தால் விவசாயம் செய்ய முடியாது என்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க முடியாது. என்றும் 100 நாள் வேலை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் தங்களுக்கு கிடைக்காது என்ற காரணத்தினால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தன்னாட்சி அமைப்பின் மூலம் கலந்தாய்வு கூட்டம் தனக்கன்குளம் மந்தையில் இன்று நடைபெற்றது. இதில் தன்னாட்சி நிறுவன அமைப்பின் நிறுவனர் நந்தகுமார் பொதுச்செயலாளர் வினோத் மற்றும் செயற்குழு உறுப்பினர் மாரி பாண்டி, தனக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி பாண்டி மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கருத்துக்களை பதிவு செய்தனர். மாநகராட்சியுடன் இணைக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்டனர் அதற்கு பொதுமக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைய விருப்பம் இல்லை என பொதுமக்களை கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் மாநகராட்சி பகுதியானால் என்னென்ன தீமைகள் என்பதை தன்னாட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு தெரிவித்தனர். இதனால் தனக்கும்குளம் பகுதியில் மாநகராட்சி பகுதியி இணைய எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது.