
மேலூர்: பகல், இரவு ஆட்டமாக கபடி போட்டி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ. வல்லாளபட்டி அரியப்பன்பட்டியில், நேற்று (அக். 8) பகல் இரவு ஆட்டமாக கபடி போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளை அ. வல்லாளபட்டி CKC & MFC கபடி குழு இணைந்து நடத்தியது. 60ம் ஆண்டாக நடைபெறும் இந்த கபடி போட்டி, ஒரு ஊரை சேர்ந்த வீரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. வெற்றி பெற்ற முதல் நான்கு அணிகளுக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.