விழுப்புரம்: செஞ்சியை சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞர் நாசாவில் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் பணியாற்றியபோது கேத்தரின் என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவிட்டாரின் சம்மதம் கிடைத்த நிலையில் அவினாஷின் சொந்த ஊரில் தமிழ் கலாச்சார முறைப்படி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பலரும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.