பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து கூறி வரும் கருத்துகளுக்கு தவெக தலைவர் விஜய் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது ஏன் என்று நடிகரும், தவெக-வை சேர்ந்தவருமான சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, "எல்லாவற்றுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியாது, தேவையான நேரத்தில் எங்கள் தலைவர் பேசுவார். எங்களது எதிரி திமுகவும் பாஜகவும் தான்” என்றார்.