மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பிற்கான CUTE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான CUTE தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் 13 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜன. 2ல் தொடங்கி பிப். 1ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்.8 வரையிலும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் பிப்.9ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.