என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு விஜயிடம் மட்டுமே நியாயம் கிடைக்கும் என கூறி தவெக மகளிரணி நிர்வாகி வீடியோ வெளியிட்டுள்ளார். "தேனி மகளிரணியை சேர்ந்த சத்யா நந்தகுமாராகிய நான் கட்சி பணியில் முழுமூச்சில் ஈடுபடுகிறேன். அண்மையில் என் மீது வழக்குகள் இருப்பதாக பொதுச் செயலாளர் ஆனந்தே கூறியதாக சொல்லி தேனி நிர்வாகிகள் என்னை புறக்கணிக்கின்றனர்" என தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வேதனையுடன் பேசினார்.