கேரளாவில் மனிதர்களை வேட்டையாடிய ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சடலமாக மீட்டனர். இந்நிலையில், வயல்வெளியில் பதுங்கி உள்ள புலி ஒன்று அவ்வழியே பைக்கில் வந்த இருவரை வேட்டையாட முயற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பதுங்கி வரும் புலியை தூரத்தில் இருக்கும்போதே அவர்கள் பார்த்துவிடுகின்றனர். ஆதலால் புலி வேட்டையாடாமல் சாலையில் அமர்ந்து ஓய்வெடுக்க துவங்கி விடுகிறது.