பீகார்: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஆசிரியர் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதிகாரில் உள்ள குமேத்பூர் ரயில் நிலையத்தில், 42 வயதான தப்ரேஸ் அஞ்சும் என்ற ஆசிரியர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். ரயிலில் ஏறும் போது, கால் தவறி அவர் தண்டவாளத்தின் கீழ் விழுந்துள்ளார். ரயில் தப்ரேஸ் அஞ்சும் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.