மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தேடி வந்த யானையை ஜேசிபி கொண்டு கிராம மக்கள் விரட்ட முயன்றுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. இதனால், சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி ஓடியது. இதையடுத்து. யானையை ஜேசிபி மூலம் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.