மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (பிப். 3) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.இதில் இணை ஆணையர் செல்லதுரை, அறங்காவலர்கள் மீனாட்சி பிரியாந்த், செந்தில்குமார், பாண்டியராஜன், கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அருள்செல்வம், பிஆர்ஒ முருகன் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.