கிசான் கிரெடி கார்டுகளின் குறுகிய கால கடன் வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கடன் தொகை வரையில் ஆண்டுக்கு 7% வட்டி. 3 லட்சத்தை தாண்டும்போது, வட்டி விகிதங்கள் வேறுபடும். இந்தக் கிரெடிட் கார்டுகளை வைத்து ATM-களிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். எந்த வங்கியில் கிரெடிட் கார்டு வாங்க விரும்புகிறோமோ, அந்த வங்கியின் வலைதளத்திற்குள் சென்று அப்ளை செய்து இந்தக் கார்டை பெறலாம்.