உசிலம்பட்டி - Usilampatti

பெண்ணிடம் தங்க நகை திருட்டு

பெண்ணிடம் தங்க நகை திருட்டு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, பெண்ணிடமிருந்து முக்கால் பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள திம்மநத்தம் சுளிச்சான்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் (50) என்பவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒரு திரவத்தை பாக்கியம் மீது தெளித்துள்ளார். சுயநினைவை இழந்த அவரிடமிருந்து மர்ம நபர் முக்கால் பவுன் தங்க நகையை திருடிச் சென்றாராம். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా