
சோழவந்தான்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ( 40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு சித்தப்பா முருகனிடம் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த சில தினங்களுக்கு முன் சதீஸ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே சதீசின் சித்தப்பா முருகன் மற்றும் சித்தி பஞ்சவர்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் முருகனின் மகன்கள் பாலமுருகன், வெற்றிவேல் மற்றும் முருகனின் மருமகன் ஜெயபால் ஆகியோர் நேற்று (அக்.,8) கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை வழக்கில் கைதாகி உள்ளனர்.