ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கடனை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "நிலுவைத் தொகையை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க முடியாததாலும், பதிவேடுகள், விவரங்கள் இல்லாததாலும் மருத்துவம் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் வழங்கிய ரூ.48.95 கோடி கல்விக்கடன் சிறப்பினமாக கருதி தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.