அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது தள பக்கத்தில், "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை. மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.