திருப்பரங்குன்றம்: மலையைச் சுற்றிலும் பேரிக்காட் அமைத்து போலீஸ் பாதுகாப்பு

63பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை (பிப் 4) மாலை இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி, இரண்டு படிப்பாதைகளிலும் மற்றும் மலை மீது 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் படிக்கட்டுகள் இல்லாமல் வேறு எந்த பாதையிலும் யாரும் ஏறாத வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட பேரிகாடுகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மீது சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி உள்ள நிலையில் வருபவர்களின் பெயர் விவரங்களை சோதனை செய்து அதன் பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி