
மேலூர்
மேலூர்: ஒற்றை சக்கரத்துடன் வந்து பரிசை வென்றவருக்கு பாராட்டு
மதுரை மாவட்டம் மேலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் திருவாதவூர் ரோட்டில், இன்று (பிப். 22) இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது மேலூர் அருகே கொட்டகுடியைச் சேர்ந்த பசுபதி என்ற சாரதி ஒட்டி சென்ற வண்டியின் ஒரு சக்கரம் உடைந்து நொறுங்கியது. ஆனாலும் ஒரு சக்கரத்துடன் தொடர்ந்து வண்டியை ஓட்டிச் சென்ற அவர், எல்லையை அடைத்து 3வது பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது. அவருக்கு விழா கமிட்டியினர் சிறப்பு பரிசு வழங்கினர்.