LGBTQIA PLUS சமூகத்தினர் மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கைகளை வரும் 17ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.