பல முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சிப்ஸ், சாஃப்ட் ட்ரிங்க்ஸ், ஜூஸ், சாக்லேட், மிட்டாய், பிஸ்கட், ஆகிய அனைத்து பொருட்களும் பளபளப்பான நிறத்தில் உள்ளன. ஏனெனில் அந்த உணவு பொருட்களில் கலர் சேர்க்கப்படுகிறது. இது செயற்கை நிறம் என்று அழைக்கப்படுகிறது. இது முதலில் கல்லீரலை சேதப்படுத்தும் மற்றும் கல்லீரலில் இருந்து உடலின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும், எனவே இது முழு உடலையும் பாதிக்கும். இந்த நிறம் உடலில் அளவுக்கு அதிகமாக சென்றால், அது பல நோய்களை உண்டாக்கும். மேலும், இது மூளைக் கட்டியையும் உண்டாக்கும்.